Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு” சிங்கப்பூரில் ஜூன் வரை….. இந்தியாவில்…..?

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு இந்தப்பதிவில் கூறப்பட்டிருக்கும் பதில் என்னவென்றால், 

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கபடுவதற்கு உறுதியான ஒரு காரணம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால், சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு. அங்கு இதுவரை பத்தாயிரத்திற்கும் குறைவானோர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் அங்கு உயிரிழப்பு என்பதும் 15ஐ தாண்டவில்லை.

ஆனால் அங்கு ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய பாதிப்பு மேலும் தீவிரம் அடையாமல் இருக்க சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாக கொண்டு இந்திய அரசு ஊராடங்கை நீட்டிக்கலாம்.

அதேபோல் நமது நாட்டிலேயே இதற்குமுன் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த சமயத்தில், தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிப்பு முதன்முதலில் அமுல்படுத்தப்பட்டது. அதேபோல்தான் தற்போதும் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவும் ஊராடங்கை நீட்டிக்க அடித்தள காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |