Categories
பல்சுவை

“MAY-01” நம் கடமை….. மறந்துடாதீங்க…. முதல் வாழ்த்து இவங்களுக்கு தான்….!!

மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமது தாய், தந்தை, உறவினர்,பக்கத்து வீட்டார் என நமக்குத் தெரிந்த உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை வருடந்தோறும் தெரிவித்து வருகிறோம். அந்த வகையில்,

கொரோனா  பாதிப்பை கண்டு பொது மக்கள் அஞ்சி நடுங்கி தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில், தங்களது உயிரை பனையம் வைத்து மக்களுக்காக சேவை செய்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் மேலும் கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் முதல் உழைப்பாளர் தின வாழ்த்தை தெரிவிக்க நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.

உழைப்பாளர் தினத்திற்கான முதல் வாழ்த்து முறைப்படி இவர்களுக்குத்தான் போய் சேர வேண்டும். மே 1 உழைப்பாளர் தினத்தன்று நீங்கள் மேற்கண்ட துறை நபர்களை கண்டால் உங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை அவர்களுக்கு நேரடியாக சென்று சமூக இடைவெளியுடன் தெரிவியுங்கள். உங்களது வாழ்த்து  அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து மென்மேலும் சேவையை மனமகிழ்வுடன் தொடர வழிவகை செய்யும்.. 

Categories

Tech |