Categories
கிரிக்கெட் விளையாட்டு

”மே.இ.தீவுகள் அணிக்கு சிக்கல்” கிரிக்கெட் வாரியத்தின் தீடிர் முடிவால் அதிர்ச்சி …!!

உடற்தகுதி இருந்தால் மட்டுமே மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இடம் பெற முடியும் என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிரடிக்குப் பெயர் பெற்ற கிரிக்கெட் அணியான மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள்  ஜிம் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டுவதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் யோ-யோ போன்ற உடற் தகுதி விதியை தளர்த்தியே செயல் படுத்தும். இதனால் உடற்தகுதி இல் லாத வீரர்கள் கூட அந்த அணியில் விளையாடிய வரலாறு உண்டு.

இந்நிலையில், சமீபத்தில் நிறைவு பெற்ற அயர்லாந்து அணிக் கெதிரான  தொடரில் மே.இ.தீவுகள் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்நாட்டு கிரிக் கெட் வாரியத்திற்குள் பெரும் சல சலப்பு ஏற்பட்டது. வீரர்கள் உடற் தகுதியும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வீரர்கள் தேர்வில் பல அதிரடி விதிகளைச் செயல்ப டுத்தியது.

அதிரடி தொடக்க வீரர் எவின் லூயிஸ், இளஞ்சிங்கம்  ஷிம்ரன் ஹெட்மையர் ஆகியோர் உடற்தகுதியை எட்டவில்லை எனக் கூறி அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.  இவர்களுக்கு பதிலாக டேரன் பிரா வோ, ரோவ்மேன் பாவெல் ஆகி யோர் அணியில் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரி யம் போல யோ-யோ செயல் முறையை நடைமுறைக்கு  கொண்டு வர  மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் தயார் நிலையில் இருப்பதால் மூத்த  வீரர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ள னர்.

Categories

Tech |