மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமென்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். மயிலாடுதுறை வட்டார மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கோரிக்கையான மையிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக மாற்றப்படுவது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ள நிலையில் முதல்வரின் அறிவிப்பால் மொத்த எண்ணிக்கை வெகு சீக்கிரமாகவே 38ஆக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.