Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் என்ன செய்ய போறோம்…. பாதிப்படைந்த தொழில்…. வேதனையில் வாடும் தொழிலாளர்கள்….!!

கருவாடு விற்பனை தொழில் பாதிப்பட்டதால் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் துறைமுகப் பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து வெயிலில் உலர வைத்து கருவாடுகளாக்கி தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, மற்றும் கிராம பகுதிகளில்  உள்ள மார்க்கெட்டுகளில் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கருவாட்டு சந்தைகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கொரோனா பரவல் தொற்று குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனையடுத்து கருவாடு வியாபாரிகள் அவர்களிடமிருந்து மீன்களை வாங்கி உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் உலரவைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் மழை பெய்து வருவதால் கருவாடு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் கருவாடுகளை மழையிலிருந்து பாதுகாக்கும் பணியில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கருவாடு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கூறும்போது கடலில் மீன்வகைகள் குறைவாக காணப்படுவதால் சிறிய வகை மீன்களை வாங்கி வெயிலில் உலரவைத்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் கருவாடு சந்தைகள் மூடப்பட்டு இருப்பதால் எங்களது தொழில் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |