Categories
மாநில செய்திகள்

விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கொதித்த எம்பி..!!

ரஜினிக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் விஜய்யை மட்டும் குறிவைப்பது ஏன் என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நடைபெற்றுவருகிறது. அப்போது, நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ரஜினிக்கு ஒரு கோடிக்கு மேல் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடிகர் விஜய்யை மட்டும் படிப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்துச் சென்ற வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்ஐசி, பிஎஸ்என்எல், ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்றுவருவதாகவும் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் கணக்கில் வராத பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |