Categories
தேசிய செய்திகள்

MBA, MCA படிப்பு விண்ணப்பம் ஆகஸ்ட் 11 துவக்கம்…. தொழில்நுட்ப கல்வி இயக்ககம்…..!!!

எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

1. விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

2. விண்ணப்பதாரர்கள் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புகளுக்குத் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 11, முடிவடையும் நாள் : ஆகஸ்ட் 31

3. பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.

4. இந்தக் கல்வியாண்டில் MBA / MCA முதுநிலைப் பட்டப்படிப்பு கலந்தாய்வு  நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

5. மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” பக்கத்தில் பார்க்கவும்.

கூடுதல் தகவல்களுக்கு 0422 – 2451100

Categories

Tech |