தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,607 எம்பிபிஎஸ், 1380 PDS இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆனது கடந்த 19ஆம் தேதி என்று ஆன்லைன் மூலமாக தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு அண்ணா சாலையில் உள்ள அரசு பணி நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது.
பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியாக கடந்த 27ஆம் தேதி வரை நடைபெற்றது .இந்த நிலையில் MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வில் இடஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள், சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போட்டோ(10), உள்ளிட்ட 13 ஆவணங்களை நீட் தேர்வு அனுமதி அட்டை, நீட் மார்க், 10,11,12th மார்க் சீட், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சமர்ப்பிக்கும்படி மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் சரிபார்த்து, இட ஒதுக்கீடு பெறுபவர்கள் விபரம் சுகாதாரத்துறை இணையத்தில் வெளியிடப்படும்.