Categories
மாநில செய்திகள்

MBBS, BDS சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சிறப்பு பிரிவினர் அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சலிங் கடந்த ஜனவரி 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் கடந்த 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இவர்களில் 9,723 மாணவர்கள் தங்களின் விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதன்பின் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் 3 நாட்கள் 38 அரசு மருத்துவக்கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,848 எம்.பி.பி.எஸ் இடங்கள், சென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ கல்லூரியில் 75 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1,368 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. அதேப்போன்று அரசு பல் மருத்துவ கல்லூரியில் 155, சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 1,193 பி.டி.எஸ் என்று மொத்தம் 6,639 இடங்கள் இருக்கின்றன.

இந்த இடங்களுக்கு முதல் கட்டமாக மருத்துவ இடங்களை தேர்வு செய்த மற்றும் தரவரிசை பட்டியலில் முதல் 6,082 மாணவர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு வர வேண்டும். இந்த சான்றிதழ்களை அருகேயுள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் சரிபார்த்து கொள்ளலாம். இதன் விவரம் https://tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net போன்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து 15ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பின் 16ஆம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்று 17-22ம் தேதி மாலை 3 மணிக்குள் அந்தெந்த கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும். இவ்வாறு சேராத மாணவர்களின் இடங்களானது காலியாக அறிவித்து 2-ம் கட்ட கவுன்சலிங்கில் இடம்பெறும். பிறகு சுய நிதி கல்லூரிகளிலுள்ள நிர்வாகம் ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையானது நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |