எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இன்று மாலைக்குள் http://tnhealth.tn.gov.in, http://tnmedicalsection.org என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories