மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே தர வேண்டும் எனக்கோரிக்கை வைத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய மருத்துவ கல்லூரி நிறுவனங்களில் சேர்ந்து மருத்துவ கல்வி பயில ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் இந்த 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த ஒதுக்கீட்டை தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆண்டில் செயல்படுத்த வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.