Categories
கல்வி

“MBBS, MDS” மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு….. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கடந்த 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 11-ம் தேதி கலந்தாய்வு கூட்டம் தொடங்கப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டத்தை அக்டோபர் 11 முதல் 17-ஆம் தேதி வரை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மாநிலங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வுக் கூட்டத்தை அக்டோபர் 17-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

எனவே மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு தேதியை தேர்வு செய்து கொள்வதற்கு மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கிடையில் அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 18-ம் தேதி வரை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு பணிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in என்ற முகவரிக்குள் செல்ல வேண்டும்.

அதன்பிறகு நியூ ரிஜிஸ்ட்ரேஷன் என்பதை தேர்வு செய்து, நீட் ரோல் நம்பர், ரெஜிஸ்டர் நம்பர், பிறந்த தேதி என அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விதமான தகவல்களையும் நிரப்ப வேண்டும். இதனைடுத்து யுஜி கவுன்சிலிங் 2022-க்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய கோர்ஸ் மற்றும் உங்கள் விருப்பத்தில் உள்ள கல்லூரிகளின் பட்டியலை நிரப்பிய பிறகு, கலந்தாய்வு தேதிகளில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் கலந்தாய்வின் கடைசி நாளில் உங்களுக்கான கலந்தாய்வு தேதி இறுதி செயப்பட்டுவிடும். இதை நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 15-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |