தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்திருந்தது. மேலும் ஜனவரி 7ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் 7.5% இட ஒதுக்கீடு மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 7 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 40, 288மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்கள் போக 4,277 எம்பிபிஎஸ் மற்றும் 175 பிடிஎஸ் என்று மொத்தம் 4452 இடங்களுக்கு 40, 288 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகமாக உள்ளது. மேலும் இதற்கான தரவரிசை பட்டியல் 2 வாரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.