ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்று குழப்பத்தில் உள்ளது.
மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர் இதனை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது . இந்த கூட்டணியில் மதிமுக கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல தோழமைக் கட்சிகள் இணைந்துள்ளன.
இதனையடுத்து தொகுதி பங்கீட்டின் அடிப்படையில் தோழமைகட்சிகளுக்கு போட்டியிடுவதற்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டன .இதனையடுத்து ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ள மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தில் போட்டியிடுவார் என்று வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் ஈரோடு பகுதிகளில் குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையை மதிமுகவால் பெற முடியாத காரணத்தினால் மதிமுகவின் பம்பரம் சின்னம் வேண்டாம் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கட்சி உறுப்பினர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது .ஆகவே இம்முறை ஈரோட்டில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடாமல் தேர்தல் ஆணையம் வழங்க இருக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடப் போவதாக வைகோ தெரிவித்துள்ளார்.