ஈழத்தமிழர் இருக்கும் சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.
இது குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில் , ஈழத் தமிழர்களை இந்திய அரசு சந்தேகக் கண்ணோடு அணுகக்கூடாது. தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.அந்த முகாம்களை அடியோடு நீக்க வேண்டும். இது சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.