மக்களுக்கு உணர்த்த காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்று உள்ளது.
காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று பெரம்பலூரில் நடைபெற்று உள்ளது. இந்த ஊர்வலத்தில் காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது.
அதாவது தடுப்போம்!தடுப்போம்!, MDR TB தடுப்போம், முழு மருந்து திட்டம் முழுமையான சிகிச்சை, காசநோய்க்கு முறைப்படி சிகிச்சை எடுப்போம் என்று வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.