Categories
மாநில செய்திகள்

எனக்கு கொரோனா வந்துவிட்டதோ… பயத்தில் கார் டிரைவர் செய்த காரியம்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மணப்பாறை அருகே கார் ஓட்டுனர் ஒருவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று எண்ணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணுகாந்தநத்தம் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் பிச்சைமணி. இவர் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் பொது முடக்கம் காரணமாக சொந்த ஊர் திரும்பிய அவருக்கு சளி, இருமல் தொடர்ந்து இருந்துவந்துள்ளது. இதனால் தனக்கு ஒருவேளை கொரோனா வந்துவிட்டதோ என்ற பயத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் இந்த நோயினால் நாம் இறந்துவிடுவோம் என்று எண்ணி அவர் பயத்தில் தனது வீட்டின் தோட்டத்தில் கை மற்றும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை தேடியபோது தோட்டத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினான். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |