டெல்லியில் நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து, அந்த பெண்ணிற்காக சண்டையிட்டு, அதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த குணால் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். குணாலின் நண்பர் கௌரவ் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து தெரியவந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த வாரம் குணால் தனது தந்தையின் பிறந்த நாளுக்கு கேக் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து குணாலை வழிமறித்து அந்த பெண்ணை காதலிக்க கூடாது என்று மிரட்டியுள்ளனர்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த பகுதி வழியே சென்றவர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த குணாலை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலை செய்த கௌரவ் மற்றும் அவர்களின் நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.