Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மேஷ ராசிக்கு”…..தன்னம்பிக்கை அதிகரிக்கும்….. எதிலும் கவலை வேண்டாம்…!!!!

 மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று  தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை கண்டு மேலதிகாரிகள்  வியக்கக்கூடும். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள்.  இன்று  குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும் . பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது ரொம்ப நல்லது. இன்று  விருந்தினர் வருகை இருக்கும்.

பணவரவை அதிகப்படுத்துவதற்கான சூழலில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் கொடுக்கும். எதிர்ப்பும், இடையூறும்  ஒருபுறம் இருந்தாலும் உங்களின் தன்னம்பிக்கையாலும்  தைரியத்தாலும்  அவற்றை போராடி எதிர்த்து நின்று வெற்றி கொள்வீர்கள். இன்றைய நாள் அனைத்து விஷியத்திலும் சிறப்பைகொடுப்பதாக இருக்கும. இன்று மாணவ செல்வங்கள்  கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்க  கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் :3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள்

 

Categories

Tech |