மேஷ ராசி அன்பர்கள், இன்று பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவிகளை மேற்கொள்வார்கள்.
நன்மை கிட்டும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். வாகனயோகம் இருக்கும். பெரியவர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதிலும் தயக்கமோ பயமோ ஏற்படாது. இன்று தொழில் வியாபாரம் ஓரளவு நன்றாகத்தான் இருக்கும். வாக்குவன்மையால் லாபமும் இருக்கும் பழைய பாக்கிகளும் வசூலாகும்.
அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். கடன்கள் யாருக்கும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதில் மட்டும் நீங்கள் கவனம் கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். கல்வியில் எந்தவித பிரச்சனையும் இல்லை, சக மாணவர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் . அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும்இளம்மஞ்சள்