மேஷ ராசி அன்பர்கள், இன்றுநன்கு பழகியவரிடம் பேசுவதில் கொஞ்சம் நிதானத்தை பின்பற்ற வேண்டும், தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை பாதுகாப்பது ரொம்ப நல்லது. மிதமான அளவில்தான் பணவரவு கிடைக்கும். வீடு , வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும், மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவதும் நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள், விருந்தினர்கள் வந்து செல்வார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும், இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று உறவினர் வகையில் உங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு நன்றாகவே நடக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் காவி