மேஷம் ராசி அன்பர்களே, இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாகவே இருக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை கொடுக்கும். சிந்தனை வளம் பெருகும். நீங்கள் பார்க்க நினைத்த நபர் ஒருவர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். சாமர்த்தியமான உங்களுடைய செயல்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவம் உயரும். மகிழ்ச்சியை கொடுக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை ஏற்படும். நீங்கள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் மட்டும் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுதும் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். வாக்குறுதிகளை இன்று முற்றிலும் நீங்கள் தவிர்க்க வேண்டும். மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்து பாடங்களைப் படியுங்கள், புரிந்துகொண்டு பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்ட காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்