மேஷராசி அன்பர்களே, இன்று இனிய செய்தி இல்லம் வந்து சேரும் நாளாகவே இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோக முயற்சி கைகூடும். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும்.
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் கையில் வந்து சேரும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பும் முழுமையாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்