Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..நினைத்தது நிறைவேறும்…நம்பிக்கை கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று சொந்தபந்தங்களால் வந்த துயர் நீங்கி விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். நினைத்தது நிறைவேற நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். இன்று தொழில் வியாபாரம் காரியங்களில் தாமதமான மெத்தனப்போக்கு காணப்படும்.

செலவு கொஞ்சம் அதிகரிக்கும், தேவையான பணவசதி கிடைக்கும், கவலை வேண்டாம். வியாபாரம் தொடர்பான பணிகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும். இழுபறியான காரியங்கள் கூட நல்லபடியாக நடந்து முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பார்ப்புகள், இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றை தாமதப்பட்டு தான் வந்தது கிடைக்கும்.

இன்று  கலைகளில் ஆர்வம் கூடும். விளையாட்டில் ஆர்வம் கூடும். மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள் ஆனால் வெற்றியும் பெறுவார்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,பிங்க் நிறம் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பிங்க் நிறம்

Categories

Tech |