Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு.. சாதிக்கும் திறமை வெளிப்படும்… செலவை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!  இன்று சுகத்திற்கு கொஞ்சம் பங்கம் விளைவிக்கும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டுத்தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை உங்களுக்குள் இருக்கும். செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எந்த ஒரு காரியத்திலும் சாதகமான பலன்கள் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்த்தாலே போதுமானதாக இருக்கும்.

பயணங்களின் பொழுது ரொம்ப கவனம் இருக்கட்டும். மற்றவர்கள் பிரச்சினையில் தயவுசெய்து தலையிட வேண்டாம். எதையும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது ரொம்ப நல்லது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாகத்தான் இன்று அலைய வேண்டியிருக்கும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் இல்லத்தில் முருகன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

 

Categories

Tech |