Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும்.. புதியவர்களின் நட்பு கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே,  இன்று வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இன்று புதிய நபர்களின் நட்பும் கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்களை சிறப்பாக செய்வதில்  மட்டும் கவனம் இருக்கட்டும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாகவே அனுப்புங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும், படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கு எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 8 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீலம் நிறம்

Categories

Tech |