மேஷம் ராசி அன்பர்களே, இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய வாகனங்கள் வாங்க திட்டம் தீட்டுவீர்கள். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது ரொம்ப சிறப்பு. இன்று எந்த ஒரு வேலையையும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளை செய்வார்கள். நண்பர்கள் மூலம் புதிய வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்களில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
முன்னேற்றமான சூழல் இருக்கும். மேற்கல்வி காணும் முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழி வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்