மேஷம் ராசி அன்பர்களே ..!!! இன்று எவரிடமும் உயர்வு, தாழ்வு கருதாமல் பழகுவீர்கள். சிறு செயலும் நேர்த்தியாக அமைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று இஸ்ட தெய்வ வழிபாடு பலன் அளிக்கும்.
எல்லா நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும், எதிர்ப்புகள் விலகி செல்லும், எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னர் கொஞ்சம் செய்யுங்கள், வீண் அலைச்சல் உங்களுக்கு குறையும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு