தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலே இத்தகைய கடன் செயலிகளை இயக்குவரின் மிரட்டல் காரணமாக பல தற்கொலைகள் நடந்துள்ளது. இந்நிலையில் தான் இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற புகார் தொடர்ந்து வருகிறது. அதன் அடிப்படையிலே இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது.
இதிலே ரிசர்வ் வங்கிச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்குபெற்றார்கள். அந்த கூட்டத்தின் இறுதியில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் செயலிகள் மட்டுமே இனி ஆப் ஸ்டோரில் இருக்க அனுமதிக்கப்படும்.இதற்காக நான் நடவடிக்கையை மத்திய எலக்ட்ரானிக் மற்றும் ஐடி அமைச்சகம் எடுக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல ரிசர்வ் வங்கி இத்தகைய கடன் செயலிகளை இயக்குபவர்கள் பயன்படுத்தும் பினாமி வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கும். அதே போலவே கார்ப்பரேட் அமைச்சகம் இத்தகைய செயலிகளுக்கு பின்னால் இருப்பவர்கள் பயன்படுத்தும் நிறுவனங்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுப்பார்கள். ஆகவே எல்லா வகைகளிலும் இத்தகைய கடன் செயலிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுரை அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கடன் செயலியை இயக்குபவர்கள் கடன் பெறுபவர்களின் கைபேசியில் இருந்து விவரங்களை எடுத்துக்கொண்டு, அந்த விவரங்களை பயன்படுத்தி மிரட்டுவது, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவோம் மற்றும் உங்களுடைய காண்டக்டில் இருப்பவர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக மிரட்டுவதாகவும் பலர் தற்கொலை செய்கிறார்கள். இத்தகைய பல செயலிகளுக்கு பின்னால் சீன நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே இந்த நிறுவனங்கள் பல்வேறு குற்றங்களிலே ஈடுபடுகின்றன. சட்டவிரோதமான கடன் நடவடிக்கை ஈடுபடுகின்றன. கருப்பு பணம் போன்ற பல்வேறு குற்றங்கள் இருக்கின்றன. ஆகவே தான் மத்திய அரசு – ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்து இத்தகைய செயலிகளை எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறது. ஏழை எளிய மக்கள் அவசரத்துக்கு கடன் தேவை என்று இருக்கும்போது அவர்களை ஏமாற்றி, பின்னர் அவர்களை மிரட்டி, அதிக வட்டி வசூலிப்பது என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறுகின்றது. இதனை தடுக்க தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.