Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை ….!!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 179ஆவது பிறந்தநாள் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பேட்டியளித்துள்ளார்.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே தனது சொத்துக்களை விற்று அதனை கட்டி முடித்தவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். பஞ்சத்தின் பிடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த அன்றைய ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் முல்லைப் பெரியாறு அணை திகழ்வதால், பென்னிகுவிக்கை தாகம் தீர்த்த தந்தையாக 5 மாவட்ட மக்கள் வணங்குகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி பென்னிக்குவிக்கின் பிறந்தநாள் விழாவை தேனி மாவட்ட மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் விழா, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தேனி மாவட்டம் லோயர்கேம்ப்-இல் அமைந்துள்ள பென்னிகுவிக்கின் மணிமண்டபத்தில் முதல்முறையாக அரசு விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு சார்பில் கலந்துகொண்டு மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுவிக்கின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் , முல்லைப் பெரியாறு அணையின் பொறியாளர்கள், விவசாயிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்த பென்னிகுவிக்கிற்கு தேனி, மதுரை உள்ளிட்ட 5மாவட்ட மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். முல்லைப் பெரியறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |