இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இறந்த பறவைகள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளது. பறவை காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. இதனை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர ஆணையாளர் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இறைச்சி கடைகளில் ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கடைகளில் உள்ள கோழி கூண்டுகளை நுகர்வோர் தொடாதவாறு தூரத்தில் வைக்கவேண்டும். கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளை குளோரின் ஆக்சைடு கொண்ட கிருமி நாசினிகளை கொண்டு இரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அதோடு இறந்த பறவைகள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. இதேபோல் இறைச்சி கடைகளுக்கு 11 நெறிமுறைகளை வகுத்து உள்ள சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை அவற்றை கடைபிடிக்காவிட்டால் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.