சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மெக்கானிக்கை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்மநாயக்கன்பட்டி பகுதியில் மெக்கானிக்கான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சரவணகுமாருக்கு ஒரு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை சரவணகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தற்போது அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.