Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவர் மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட புத்தகம், வெள்ளை அங்கி போன்றவற்றை வழங்கியதோடு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது, பேருந்து விபத்தில் அடிபட்டவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்ததால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. இதற்காக நான் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரியின் வயது சுமார் 300 வருடங்களுக்கும் மேல் இருக்கும். இந்த வரலாற்று சிறப்புமிக்க மருத்துவ கல்லூரி தான் இந்தியாவின் முதல் பழமை வாய்ந்த மருத்துவ கல்லூரி ஆகும்.

இந்த கல்லூரியில் படித்த பல மாணவர்கள் இன்று உலகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் திகழ்கிறார்கள். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மருத்துவத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசு மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை முதல்வர் உறுதி செய்ததால், இந்த வருடம் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவம் போன்றவற்றில் 565 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் என 71 மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளது. மேலும் மீதமுள்ள தென்காசி, மயிலாடுதுறை திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்டா 6 மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு அனுமதி கோர இருக்கிறோம். இது தொடர்பான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |