Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன்…. “உதயநிதி ஸ்டாலின்” கலந்துரையாடல்..!!

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்  சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் காணொலி காட்சி வாயிலாகத் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடல் செய்தார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிடக்கூடிய செய்திக்குறிப்பில்: “சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்றப் பிறகும், தனியாரை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக்கண்டித்து போராடும் மாணவருடன் காணொலி காட்சிமூலம் கலந்துரையாடினேன். கோரிக்கையின் நியாயத்தை உணராது போராட்டத்தை முடக்குவதிலேயே அடிமை அரசு குறியாகவுள்ளது என மாணவர்கள் வேதனைப்பட்டனர்.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள விதிகள் அனைத்தையும் பின்பற்றும் இம்மருத்துவக்கல்லூரியில் கட்டணம் மட்டும் அரசு மருத்துவக்கல்லூரிகளைவிட 30 சதவீதம் அதிகம் வசூலிப்பது பெரும் அநீதி. மாணவர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை திமுக கழகம் அவர்கள் உடன் நிற்கும் என உறுதியளித்ததாகத் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |