Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து தோல்வி தான்..! இ-மெயிலில் வந்த வினை… மருத்துவக் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு..!!

இங்கிலாந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த மாரெட் ப்லூகஸ் (21) என்ற மாணவி தனது இரண்டாம் ஆண்டு மருத்துவக்கல்வி படிப்பை கார்டிப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் மாரெட் ப்லூகஸ் மூன்றாம் ஆண்டு செல்வதற்கான தேர்வை எழுதி 39% மதிப்பெண் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். அதன் பிறகு அவர் மறுதேர்வையும் எழுதியுள்ளார். அந்த தேர்வின் முடிவுகள் மாரெட் ப்லூகஸ்-ன் இமெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த இ-மெயிலில் மறு தேர்விலும் மாரெட் ப்லூகஸ் தோல்வியடைந்துள்ளதாக வந்துள்ளது. ஆனால் 62% பெற்று மாரெட் தேர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் பல்கலைக்கழகத்தின் மூலம் இ-மெயிலில் அனுப்பப்பட்ட தேர்வின் முடிவானது தவறாக இருந்துள்ளது. இந்த விஷயம் தெரியாமல் மாரெட் ப்லூகஸ் மறு தேர்விலும் தோல்வியடைந்ததாக எண்ணி மன வேதனையில் பிரிட்டானியா மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Categories

Tech |