தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது..
கொரோனா தொற்று காரணமாக தனியார் – அரசு மருத்துவ கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன இதனால் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் வகுப்பு நடைபெற்ற நிலையில், தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவ கல்லூரி இயக்குநரகம் அறிவித்துள்ளது..
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 60 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றவேண்டும்.. வகுப்பறை மற்றும் கல்லூரி வளாகத்தில் குழுவாக இருக்க கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் வழிகாட்டக்கூடிய அடிப்படையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது..