நிபர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவ கலந்தாய்வு 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கலந்தாய்வுக்கு வருபவர்களுக்கு தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என சுகாதாரத்துறை
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் தொடர்பான அட்டவணை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறத.
தமிழகத்தில் நிபர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருப்பதால் 7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்ட மக்கள் வெளியே வரவேண்டாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வந்தது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.