Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு கஷ்டமா இருக்கு” 7 கிலோ மீட்டர் நடைப்பயணம்… மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

மலைப்பாதையில் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட எல்லையில் இருக்கும் மலைத்தொடரில் கமடகுட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாதம் ஒருமுறை இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிப்பதற்காக செல்கின்றனர். அதாவது மருத்துவ குழுவினர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலையில் நடை பயணத்தை மேற்கொண்டு இந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்க செல்கின்றனர்.

இதனை அடுத்து மருத்துவக் குழுவினரின் சிகிச்சைக்கு பயந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் சில மக்கள் வனப்பகுதிக்குள் ஓடும் சம்பவமும் அவ்வபோது நடைபெறும். இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் பொதுமக்களின் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதனை செய்து மாத்திரைகளை வழங்குகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, தங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இவ்வாறு நீண்ட தூரம் மருத்துவர்கள் நடந்து வருவது வருத்தமாக இருப்பதாகவும், தங்கள் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |