அமெரிக்காவில், சினிமாவில் நடப்பது போன்று அதிசயமான மற்றும் ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும், கேத்தி பேடன் என்பவர், மைதானத்தில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரின் தொலைபேசிக்கு வந்த அழைப்பில், ஒரு நபர் உங்கள் மகள் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இதனால் கேத்தி, பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அப்போது, அதிக பதற்றமடைந்தால் அவருக்கு மாரடைப்பில் மயங்கி விழுந்து விட்டார். உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அவரின் ரத்த அழுத்தம் முழுவதுமாக குறைந்து, மூளைக்கு செல்லக்கூடிய ஆக்சிஜன் நின்று போனது. ஏறக்குறைய 45 நிமிடங்கள் அவருக்கு ஆக்சிஜன் இல்லை. எனவே கேத்தி மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதே சமயத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கேத்தியின் மகளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்துவிட்டது.
எனினும், குழந்தை பிறந்த சந்தோசமான தகவலை கூறுவதற்கு முன்பு, கேத்தி உயிரிழந்த தகவலை அவரின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கூறுயுள்ளார்கள். இதனால் குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் ஓடியுள்ளார்கள்.
கேத்திக்கு ஆக்சிஜன் அளவு அதிகரித்து, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து விட்டார். மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். கேத்தி, “எனக்கு வாழ்வதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இனி என் வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பில்லாதது” என்று நெகிழ்வுடன் கூறியிருக்கிறார்.