Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ராக்கிங் பிரச்சனையால் நடந்ததா….? மாணவர் தற்கொலை முயற்சி…. தர்மபுரியில் பரபரப்பு…!!

மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி 2-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனியர் மாணவர்கள் சரவணனை ராக்கிங் செய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் இருக்கும் மருத்துவ கல்லூரி கமிட்டிக்கு சரவணன் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி சரவணனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தர்மபுரி மருத்துவ கல்லூரியில் வேலை பார்க்கும் 2 வார்டன்கள் மற்றும் ஒரு டாக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதன் பின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என சரவணனிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சரவணன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக சரவணனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |