எம்எஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கு தேசிய தேர்வு வாரியம் நீட் நுழைவுத் தேர்வின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3,750 ரூபாயில் இருந்து 5,015 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் 2,750 ரூபாயில் இருந்து 3,835 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான பதிவு இணையதளத்தில் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.