அருகம்புல்லின் நன்மைகள்
பூரான் பாம்பு தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அருகம்புல்லை அரைத்து ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் கொடுத்தால் விஷம் பரவுவதை தாமதமாகும்.
ஒரு கையளவு அருகம்புல் எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை அரிப்பு புண் இருக்கும் இடத்தில் போட்டு ஒரு மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும் தினசரி இவ்வாறு செய்துவர அனைத்தும் சரியாகும்.
அருகம்புல், வெட்டிவேர், கிச்சிலிக்கிழங்கு, மஞ்சள் இவை அனைத்தையும் சமமாக எடுத்து மை போல் நன்றாக அரைத்து அதனை தலைக்குத் தேய்த்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
ஒரு கையளவு அருகம்புல்லை எடுத்து நன்றாக அரைத்து ஆட்டுப் பாலுடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் குடித்து வந்தால் மூலம், ரத்த மூலம் போன்ற சகல பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
அருகம்புல்லை அரைத்து பச்சை பாலில் கலந்து பெண்கள் குடித்து வர மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்றுவலி குறையும்.
ஏதேனும் காயம் பட்டு இரத்தம் கொட்டினால் அருகம்புல்லை அரைத்து கட்டினால் ரத்தம் நிற்கும்.
அருகம்புல்லை அரைத்து லேசாக அரைத்து சாறை இரண்டு துளி கண்களில் ஊற்றினால் கண் சிவப்பு, கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து பச்சை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடை குறையும்.