இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் ஒரு ஸ்ப்ரே விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த SaNOtize என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவின் Glenmark என்ற நிறுவனம் இப்புதிய மருந்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஸ்ப்ரே போன்று இருக்கும் இந்த Nitric Oxide Nasal Spray மருந்தானது, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஹொங்ஹொங், இலங்கை, மியான்மர், கம்போடியா, தைவான், புரூனே, நேபாளம், வியட்நாம் மற்றும் TImer Leste போன்ற நாடுகளில் உருவாக்கப்பட இருக்கிறது.
தொற்று பரவுவதற்கு முன், இம்மருந்து தடுப்பு மருந்தாக செயல்படுகிறது. மேலும் தொற்று ஏற்பட்டவுடன், குணப்படுத்தவும் முதல் கட்ட சிகிச்சைக்காக பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்த மருந்து தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா மாறுபாடுகளை எதிர்த்தும் பலனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கனடா மற்றும் பிரிட்டன் நாட்டின் தன்னார்வலர்கள் இந்த மருந்துக்கான சோதனையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். இம்மருந்தானது, இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.