வாய் புண்ணை சரிசெய்ய இயற்கையான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு
அதிகப்படியான சூட்டினாலும் நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு காரணமாகவும் இரைப்பையில் புண் இருப்பதன் காரணமாகவும் வாய்ப்புண் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மன அழுத்தம் உணர்ச்சிவசப்படுதல் போன்றவையும் வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. வாய்ப்புண்ணை நிரந்தரமாக சரிசெய்யும் சில மருத்துவ குறிப்புகள்
- தேங்காய் பால் வைத்து தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமடையும்.
- இரண்டு கப் தண்ணீரில் வெந்தய செடியின் இலையைப் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும்.
- கொய்யா இலையை நன்றாக மென்று சாறை விழுங்கி வந்தாலும் வாய்ப் புண் குணமடையும்.
- வெறும் வயிற்றில் மஞ்சள் துண்டு சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறும்.
- தக்காளியை நன்றாக அரைத்து கூழாக்கி தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்து வருவதால் வாய்ப் புண் குணமடையும்.
- புதினா இலையை அரைத்து சாறெடுத்து வாயில் புண் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
- வாழைப்பூ சூப் செய்து குடித்து வந்தால் வாய்ப்புண் காணாமல் போகும்.