கொரோனா தடுப்பு மருந்து எப்போது மக்களுக்கு கிடைக்கும் என்ற உண்மை தகவலை உலக சுகாதார நிறுவன உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை உலக மக்களை சென்றடைவதற்கு இரண்டரை வருடங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்புப் பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். கொரோனாவுக்குரிய தடுப்பு மருந்து உருவாக்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிக அளவு உற்பத்தி செய்து 7.8 பில்லியன் உலக மக்களுக்கு கொண்டு செல்ல குறைந்தது ஒரு வருடம் ஆகும் எனவும் டேவிட் நபரோ கூறியுள்ளார்.
லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியில் உலக சுகாதார பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் சில கிருமிகளுக்கான தடுப்பு மருந்து பல வருடங்கள் ஆகியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா தொடர்பாக எதற்காக முன்பே தெரிவிக்கவில்லை என மக்கள் அவர்கள் நாட்டு அரசையும் உலக சுகாதார நிறுவனத்தையும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் இன்னும் விரைவாக நம்மால் செயல்பட்டிருக்க முடியாதா என கேட்கின்றனர். முன்னரே சரியான முடிவுகளை எடுத்து இருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என்பதை நாம் இப்போது உணர்ந்திருக்கிறோம். ஆனால் இந்தியாவில் தோற்று கண்டறியப்பட்ட பொழுதே நாடு முடக்கப்பட்டிருந்தால் ஆயிரகணக்கான மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என டேவிட் நபரோ கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 50 முதல் 70 சதவீதம் பேருக்குஅறிகுறி இல்லாமலேயே தொற்று ஏற்பட்டுள்ளது. அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் நபருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படாது. ஆனால் அவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.