மீன் வலையில் சிக்கிய 10 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பாற்றில் மீன் பிடிப்பதற்காக சிலர் வலை விரித்துள்ளனர். இந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர்.
இதனை அடுத்து வனத்துறையினர் மீட்கப்பட்ட மலைப்பாம்பை பத்திரமாக கொண்டு சென்று களக்காடு முதலிருப்பான் வனப்பகுதியில் விட்டனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, மலைப்பாம்பு, கருநாகம் உள்ளிட்ட ஏராளமான பாம்புகள் உலா வருவதாகவும், மேலும் ஆற்றில் உள்ள புதர்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மலைப்பாம்புகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுவதாகவும் கூறியுள்ளனர்.