மீன் வியாபாரி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் திருமலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மகள் திருமணமாகி ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கால்வாயில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமலையாண்டி தனியாக நடுவக்குறிச்சி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமலையாண்டி தீபாவளி பண்டிகைக்காக கால்வாய் கிராமம் சென்று மகளை பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பினார்.
இதனையடுத்து மறுநாள் காலையில் திருமலையாண்டி வெளியில் வராததால் அருகிலுள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது திருமலையாண்டி வீட்டினுள் மயங்கி கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் திருமலையாண்டியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே திருமலையாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.