மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் முத்துசாமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் முத்துசாமி அவரது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி தினமும் மீன் வியாபாரத்திற்கு சென்று வந்துள்ளார். மேலும் அவரின் மனைவி இறந்த துக்கத்தில் விற்பனைக்கும் அடிக்கடி செல்லாமல் இருந்ததால் வியாபாரத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சைக்கிளில் மீன் வியாபாரத்திற்கு சென்ற முத்துசாமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து முத்துசாமியை அவரது மகன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் முத்துசாமி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொழந்தட்டு விலக்கில் மதுபானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துசாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.