மீனா தனது மகள் நைனிகா உடன் இணைந்து எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். சமீபத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ”அண்ணாத்த” திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, இவர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்னும் மகள் உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் மீனா தனது மகள் நைனிகா உடன் இணைந்து எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.