மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். மறதியால் விட்டுப்போன பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். இன்று அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும். ஆனால் கவனமாக ஒரு சில காரியங்களை மேற்கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும் ஆனால் நல்ல பலனைக் கொடுக்கும்.
குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுடைய செயல் திறமை அதிகரிக்கும். மற்றவர் பார்வையில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு முன்னேறி செல்வீர்கள். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும் திருமண முயற்சிகள் சிறப்பாக நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் மஞ்சள் நிறம் அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்